மின்சார ஊழியர்களுக்கு தீயணைப்பு பயிற்சி

மின்சார ஊழியர்களுக்கு தீயணைப்பு  பயிற்சி
X
கன்னியாகுமரி
கன்னியாகுமரி அருகே பரமாத்தலிங்கபுரத்தில் மின்சார வாரிய துணை மின் நிலையத்தில் வைத்து மின்சார ஊழியர்களுக்கு தீயணைப்பு பயிற்சியை குமரி தீயணைப்பு துறையினர் செய்து காண்பித்தனர். உதவி செயற்பொறியாளர் வில்சன் தலைமை தாங்கினார். உதவி பொறியாளர் ஜோஸ்லின், மயிலாடி மின்சார இளநிலைபொறியாளர் ராஜன்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் அதிகாரிகள் ரமேஷ், சந்திரமோகன்,அருண், திலகசுந்தர், ஊழியர்கள் மூர்த்தி, வேலாயுதம், பொன் ராஜ்,கலைசெல்வி, செல்வக்குமார், நடராஜன், முருகன், அசோக்குமார் கலந்துகொண்டனர். சமீபத்தில் துத்துக்குடி அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட தீவிபத்தை போல மின் பணியின்போது ஏற்படும் தீ விபத்துக்களை எப்படி கையாள்வது, கையில் கிடைத்த பொருட்களை கொண்டு எவ்வாறு தீயை கட்டுபடுத்துவது போன்ற பயிற்சிகளையும், அறிவுரைகளையும் கன்னியாகுமரி தீயணைப்பு நிலைய அலுவலர் சுரேஷ் சந்திரகாந்த் தலைமையில் சிறப்பு பயிற்சி நிலைய அலுவலர் பாலகிருஷ்ணன், தீ அணைப்பர்கள் ஸ்ரீனிவாசன், சுந்தர்ராஜன், பார்த்திபன், செல்வன் ஆகியோர் கொண்ட குழுவினர் செய்முறை விளக்கம் மூலம் செய்து காண்பித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Next Story