தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவி.

X
Paramathi Velur King 24x7 |2 April 2025 7:17 PM ISTதொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பார்வையற்றவர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா.
பரமத்தி வேலூர், ஏப்:2 தி சம்தசனி ஃபவுன்டேசன் மற்றும் நாமக்கல் பொத்தனூர் வேர்டு நிறுவனமும் இணைந்து தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பார்வையற்றவர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா ஹோட்டல் சவுத் இந்தியன் ரெசிடென்சி பரமத்தி வேலூரில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பொத்தனூர் பேரூராட்சி தலைவர் கருணாநிதி தலைமை வகித்தார். வேர்டு நிறுவன செயலர் சிவகாமவல்லி வரவேற்புரையாற்றினார். ஹோட்டல் சவுத் இந்தியன் ரெசிடென்சி இயக்குனர் நந்தகுமார் முன்னிலை வகித்தார். மருத்துவர் முத்துக்குமார் தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் மற்றும் பார்வையற்றவர்களுக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையற்றினார். விழாவிற்கு அரிமா அன்பழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிவில் வேர்டு நிறுவன களப்பணியாளர் சாந்தி நன்றி கூறினார்.
Next Story
