குமரி : சாலையில் குவித்த கால்வாய் கழிவுகள்

X

அகற்ற கோரிக்கை
குமரியில் கோடைகாலங்களில் நீர்நிலைகளை சுத்தம் செய்து மழைநீரை சேமித்து வைக்கும் நோக்கில் நாஞ்சில் நாடு புத்தானறு கால்வாயில் கழிவுகளை அகற்றி சுத்தம் செய்யும் பணிகள் தொடங்கி மயிலாடி முதல் பொற்றையடி வரை முடிந்துள்ளது. கால்வாயை சுத்தம் செய்த மண் மற்றும் கழிவுகளை பொற்றையடி - மயிலாடி ஈத்தாமடம் தேசிய நெடுஞ்சாலை கரையில் மலைபோல் குவித்து வைத்துள்ளார். ஏற்கனவே அகலம் குறைவாக உள்ள இந்த ரோடு பல அபாய வளைவுகளை கொண்டுள்ளது. தற்பொழுது கூண்டு பாலம் சரிசெய்யும் பணி நடைபெற்று வருவதால் அரசு பஸ்கள், மற்றும் அனைத்து வாகனங்களும் இந்த ரோட்டில் தான் இயக்கபடுகின்றன. எதிர் எதிரே வரும் வாகனங்கள் செல்ல கூட இடமில்லாத இந்த ரோட்டில் மண் கழிவுகள் தேங்கி கிடப்பதால் வாகன ஒட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளார்கள். மேலும் இரவு நேரங்களில் போதிய மின்வசதியில்லாத காரணத்தினால் டூவீலரில் வருவோர் விபத்துக்களில் சிக்கிவருமின்றனர். பல லட்சம் செலவில் ஆற்றை சுத்தபடுத்தி கழிவுகளை சாலையின் கரையில் வைத்திருப்பதால் மீண்டும் கழிவுகள் ஆற்றை நிரப்பும் சூழ்நிலையுள்ளது. எனவே பொதுப்பணி துறை உடனடி சாலையில் குவித்துள்ள கழிவு மண்ணை அகற்ற கோரிக்கை எழுந்துள்ளது.
Next Story