ஆரி ஒர்க் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

X

நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உப்பட்டியில் ஆரி ஒர்க் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மத்திய அரசு திறன் மேம்பாட்டு துறை மகளிர்களுக்கு 6 மாதம் ஆரி எனப்படும் கைவினை தொழிற்பயிற்சி வழங்கப்பட்டது. இந்த பயிற்சியில் 60 பேர் பங்கேற்று பயிற்சி பெற்றனர். அவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி உப்பட்டியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பயிற்சி மைய பயிற்றுநர் சுலோச்சனா தலைமை தாங்கினார். ஓய்வு பெற்ற ஆசிரியர் அப்துல்சமது, முன்னாள் கவுன்சிலர் மூர்த்தி, ஆரி பயிற்சி பயிற்றுனர்கள் நந்தினி, ராஜேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் உப்பட்டி எம் எஸ் எஸ் பள்ளி தலைமை ஆசிரியர் கவிதா பேசும் போது பெண்கள் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்வதற்கு சுய தொழில் அவசியமாக உள்ளது. அதனை முறையாக கற்றுக்கொண்டு உள்ளதால் தங்கள் வருவாய் பெருக்கு திட்டமாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். தற்போது பெண்கள் பலவேறு நிலைகளில் உயர்ந்து உள்ளனர் என்பதும் அதற்க்கு ஏற்ப வருமானம் ஈட்ட கூடிய வாய்ப்புகள் இருப்பதும் குறிப்பிட தக்கது என்றார். கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் பேசும்போது மகளிர் சுயதொழில் மேற்கொள்ள முன்வரும் வகையில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. சுயதொழில் பயிற்சி அளித்து அதற்கான சான்றிதழ்களை மத்திய அரசு வழங்கியுள்ளது. மாநில அரசு தற்போது மகளிர் குழுக்களுக்கு கடனுதவி வழங்கி தொழில் முனைவோர் ஆக்க நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இவற்றைப் முறையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்தும் வருவாய் பெருக்கி கொள்ள முடியும் என்றார். சாலோம் சாரிட்டபிள் டிரஸ்ட் இயக்குனர் விஜயன் சாமுவேல் பேசும்போது மகளிர் மேம்பாட்டிற்கு அக்கறை எடுத்து கொள்வதால் அவர்களின் வருவாய் மேம்பட பயிற்சிகள் வழங்கப்படுகிறது. மகளிர்கள் சேமிக்கும் வாய்ப்பையும் உருவாக்கி கொள்ள வேண்டும் என்றார். கூடலூர் அரசு கலை அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர் மகேஷ்வரன் பேசும்போது மகளிர் தலைமையில் குடும்பங்களை சிறப்புடன் வழி நடத்தி வரும் நிலையில் பலவேறு செலவினங்களை சமாளிக்க கூடுதல் வருவாய் தேவைபடுகிறது. இதன் அடிப்படையில் சுயதொழில் மேற்கொண்டு வருவாய் பெருக்கி கொள்ள வேண்டும் என்றார். தொடர்ந்து பயிற்சி பெற்ற மகளிர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
Next Story