அரசு மற்றும் அரசு உதவி பெறும்பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி

அரசு மற்றும் அரசு உதவி பெறும்பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி
X
அரசு மற்றும் அரசு உதவி பெறும்பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி நடைபெற்றது.
அரியலூர் ஏப்.2- அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் ஆண்டிமடம் தா.பழூர் ஒன்றியங்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு இலவச நீட் தேர்வுக்கான பயிற்சி ஜெயங்கொண்டம் பாத்திமா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கப்பட்டது. தமிழக அரசின் 7.5% இட ஒதுக்கீட்டில் மருத்துவ நீட் தேர்வில் விண்ணப்பித்துள்ள அரியலூர் மாவட்ட ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், மற்றும் தா. பழூர் ஒன்றிய அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பயன் பெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ள இலவச நீட் பயிற்சி ஜெயங்கொண்டம் பாத்திமா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கியது. இதில் அரியலூர் மாவட்ட உதவி திட்ட அலுவலர் (பொ) திரு சக்கரவர்த்தி மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் டேவிட் ஆரோக்கியராஜ் மற்றும் நீட் பயிற்சி ஆசிரியர் செந்தில் மற்றும் ஒருங்கிணைப்பாளர் இளஞ்செழியன் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி தொடங்கி வைத்தனர். இப்ப பயிற்சியில் இயற்பியல் வேதியல் தாவரவியல் விலங்கியல் ஆகிய பாடங்களில் நீட் பயிற்சி அளிக்கப்படும். இப்ப பயிற்சியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து சுமார் 50 மாணவ மாணவியர் கலந்து கொண்டு பயன்பெறுகின்றனர்.
Next Story