நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் லேசான சாரல் மழையுடன் கூடிய அடர்ந்த மேகமூட்டம் சூழ்ந்தும் கடும் குளிர் நிலவி வருகிறது

நீலகிரி மாவட்டம் குந்தாப் பகுதியில் அதிகபட்சமாக 12 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது
நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் லேசான சாரல் மழையுடன் கூடிய அடர்ந்த மேகமூட்டம் சூழ்ந்தும் கடும் குளிர் நிலவி வருகிறது நீலகிரி மாவட்டம் குந்தாப் பகுதியில் அதிகபட்சமாக 12 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டு வந்தது இந்த நிலையில் வானிலை ஆய்வு மையம் தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்யும் என அறிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து குந்தா மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இரவு லேசான சாரல் மழை பெய்தது இதனைத் தொடர்ந்து இன்று காலை முதல் குந்தா மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் மேக மூட்டம் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் லவ்டேல் மஞ்சூர் செல்லும் சாலை மற்றும் மலைப்பாதையில் காலை முதல் கடும் மேகமூட்டம் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு மேகமூட்டம் சூழ்ந்துள்ளதால் மலைப்பாதையில் சுற்றுலா வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களில் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டு ஆமை வேகத்தில் ஊர்ந்து செல்கின்றனர்.
Next Story