திமுக சார்பில் ஆய்வுக் கூட்டம்

X
தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் அவர்கள் எதிர்வரும் 5,6, தேதிகளில் நமது நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார்கள். மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனை மருத்துவக் கல்லூரி திறந்து வைத்து,அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் மாவட்டத்தில் உள்ள ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.மற்றும் அரசு கட்டிடங்களை திறந்து வைக்க உள்ளார். அவர்களை வரவேற்கும் விதமாக கட்டப்பட்டு பகுதியில் குன்னூர் நகர கழகத்தின் சார்பில் மாபெரும் வரவேற்பு நிகழ்ச்சி நடத்துவது குறித்து ஆலோசனைக் கூட்டம் குன்னூர் நகரஅவை தலைவர் தாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. குன்னூர் நகர கழக செயலாளர் எம்.இராமசாமி அவர்கள் அனைவரும் வரவேற்று தளபதி வருகை குறித்து ஆலோசனை வழங்கினார். இந்த கூட்டத்தில் மாநில சிறுபான்மை பிரிவு துணைச் செயலாளர் இரா. அன்வர் கான், மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணைச் செயலாளர் பா.மு. வாசிம் ராஜா, பொதுக்குழு உறுப்பினர்கள் சதக்கத்துல்லா, செல்வம், தலைமை கழக பேச்சாளர் மு.முபாரக் நகர மன்ற தலைவர் சுசிலா முருகேசன், நகரத் துணைச் செயலாளர்கள் முருகேசன், சாந்தா சந்திரன், வினோத், நகர பொருளாளர் ஜெகநாத்ராவ், மாவட்ட பிரதிநிதி மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இந்த கூட்டத்தில் கிளைக் கழக செயலாளர்கள் பிரதிநிதிகள் மற்றும் பாகநிலை முகவர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கூட்டத்தின் முடிவில் மாவட்ட பிரதிநிதி ஜோ.சார்லி நன்றி கூறினார்
Next Story

