வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

X

பள்ளப்பட்டி ஊராட்சி ஒன்றியம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டனர்
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டனர். நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், பள்ளப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பள்ளப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நபார்டு வங்கியின் நிதியுதவியுடன் ரூ.34.83 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் 2 கூடுதல் வகுப்பறைகள் கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார். மேலும், பள்ளப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் குழந்தைகளிடம் பாடங்கள் தொடர்பாக விளக்கங்கள் கேட்டு, குழந்தைகளிடம் கற்றல் அடைவு மற்றும் வாசிப்புத் திறன் குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். அதனை தொடர்ந்து, குல்லக்குண்டு ஊராட்சிக்குட்பட்ட கல்லடிப்பட்டி கிராமத்தில் ரூ.22.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டிமுடிக்கப்பட்ட கிராம நூலகத்தில் அமைக்கப்பட்டுள்ள சாய்வுதளம், மின் விளக்குகள், மின் விசிறிகள், நூல்கள் வைப்பதற்கு அமைக்கப்பட்டுள்ள அலமாரிகள் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். மேலும், கிராம நூலகம் கட்டுவதற்கு இடம் தானமாக வழங்கிய ஞான சந்தனம் அவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பொன்னாடை அணிவித்து கௌரவித்தார். தொடர்ந்து, விளாம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட விளாம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.34.23 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் 2 கூடுதல் வகுப்பறை கட்டுமான பணிகள் மற்றும் விளாம்பட்டி கிராம நிர்வாக அலுவலகத்தில் நில உடமை பதிவேடுகள், சான்றிதழ் ஆவணங்கள், பட்டா, சிட்டா ஆவணங்கள், வருகை பதிவேடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார். தொடர்ந்து அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளின் வருகை பதிவேடுகள், குழந்தைகளுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பஞ்சவர்ணம், பத்மாவதி மற்றும் துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
Next Story