முருகன் கோவிலில் கிருத்திகை வழிபாடு

வெள்ளகோவில் பகுதிகளில் முருகன் கோவிலில் கிருத்திகை வழிபாடு
வெள்ளகோவில் பகுதி முருகன் கோவில்களில் நேற்று கிருத்திகை தினத்தை ஒட்டி சிறப்பு வழிபாடுகள் நடை பெற்றது. மூலனூர் சாலை சோளீஸ்வரர் கோவில்வளாகத்தில் உள்ள ஸ்ரீ வள்ளி தேவசேனா சுப்பிரமணியர் கோவில், உப்புபாளையம் சாலை முத்துக்குமார் நகர் பாலமுருகன் கோவில், எல்.கே.சி.நகர் ஸ்ரீபாலமுருகன் கோவில், மேட்டுப்பாளையம் புஷ்பகிரி வேலாயுத கந்தசாமி கோவில், மயில்ரங்கம் ஆறுமுக பெருமாள் கோவில், சுப்பிரமணிய கவுண்டன்வலசு வேல்முருகன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. கோவில்களில் சுவாமிக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், விபூதி, தேன், சந்தனம், பன்னீர் உள்பட பல்வேறு பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடத்தி தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு முருகனை வழிபட்டனர்.
Next Story