மது போதையில் இருசக்கர வாகனங்களை சேதப்படுத்தும் நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது

மது போதையில் இருசக்கர வாகனங்களை சேதப்படுத்தும் நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது
X
மது போதையில் இருசக்கர வாகனங்களை சேதப்படுத்தும் நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த குட் லக் என்ற மாறிசெல்வம் என்ற இளைஞர் தெருக்களில் நிறுத்தியுள்ள இருசக்கர வாகனங்களை உடைப்பது உள்ளிட்ட பல்வேறு அட்டூழியங்களை செய்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளி என்பதால் இவர் மீது புகார் கொடுக்கவும் பொதுமக்கள் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர். காவல்துறையினர் தக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அம்மன் பொட்டல் தெருவை சேர்ந்தவர் குட்லக் என்ற மாரிச்செல்வம். இவர் மீது 50 க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த நிலையில் இரவு நேரத்தில் கஞ்சா மற்றும் குடிபோதையில் அப்பகுதியில் சுற்றி திரியும் மாரிச்செல்வம், தெருக்களில் நிறுத்தி வைத்துள்ள இரு சக்கர வாகனங்களை அடித்து உடைப்பது, பெட்ரோல் திருடுவது உள்ளிட்ட பல்வேறு அட்டூழியங்களை தொடர்ந்து செய்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதை தட்டி கேட்டாலோ அல்லது காவல்துறையில் புகார் அளிக்க முயன்றாலோ அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுவதால், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். நாளுக்கு நாள் இவரது அட்டூழியங்கள் அதிகமாகி வருவதால் காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து பொதுமக்களை காக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Next Story