தென்காசி மாவட்டத்திற்கு கனமழைக்கு வாய்ப்பு

X
தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதனால் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக இன்று (ஏப்.3) மற்றும் ஏப்ரல் -05 ஆகிய 3 நாள்களுக்கு தென்காசி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்காசி மாவட்ட பொதுமக்கள் வெளியூர் பயணம் செய்யும்போது கவனமாக சென்று வருமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.
Next Story

