நீர் நிலைகளை பாதிக்காத வகையில்கழிவுநீர் திட்டம் செயல்படுத்தப்படும் நகராட்சி கமிஷனர் தகவல்

நீர் நிலைகளை பாதிக்காத வகையில்கழிவுநீர் திட்டம் செயல்படுத்தப்படும் நகராட்சி கமிஷனர் தகவல்
X
நீர் நிலைகளை பாதிக்காத வகையில்கழிவுநீர் திட்டம் செயல்படுத்தப்படும் நகராட்சி கமிஷனர் தகவல்
திருச்செங்கோட்டில் நீர் நிலைகளை பாதிக்காத வகையில்கழிவுநீர் திட்டம் செயல்படுத்தப்படும் நகராட்சி கமிஷனர் தகவல் திருச்செங்கோட்டில் நீர் நிலைகள் மற்றும் விவசாய நிலங்கள் பாதிக்காதவாறு, கழிவுநீர் கால்வாய் திட்டம் செயல்படுத்த நடவடிக்கை பொதுமக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் நகராட்சி கமிஷனர் அருள் . தெரிவித்துள்ளார். இதுகு றித்து அவர் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருச்செங்கோடு நக ராட்சி நிர்வாகம் மற்றும் - குடிநீர் வழங்கல் துறை மூலம், தூய்மை பாரத் இயக்கத்தில் நிர்வாக அனுமதி பெறப்பட்டு, குறுக்கீட்டு மற்றும் திசை திருப்புதல் பணிக்கு ₹15.59 கோடி மதிப்பீட்டிற்கு தொழில்நுட்ப அனுமதி பெறப்பட்டுள்ளது. அதன் படி, 750 கி.மீ., நீளத்திற்கு புதியதாக வடிகால், 230 கி.மீ., நீளத்திற்கு கழிவுநீர் உந்து குழாய்களும், மோட்டாருடன் கூடிய கழிவுநீர் சேக ரிப்புத் தொட்டியும் அமைக்கும் பணிகள் நடைபெற்று வரு கிறது. கான்கிரீட் டாலான வடிகால் அமைத்து, வீட்டிலி ருந்து வெளியேற்றப்படும் உபயோகப்படுத்தப்பட்ட நீர்எடுத்துச் செல்லப்படுகி றது. ஏரி, குளங்கள் மற்றும் விவசாய நிலங்கள் பாதிக் காதவகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் நகராட்சி யால் தொடர்ந்து கண்கா ணிக்கப்படும். மின்தடை ஏற்படும் சமயங்களில், ஜெனரேட்டர் உதவியுடன் மோட்டார்கள் இயக்கப்ப டும். இத்திட்டத்தினால் பொது மக்களுக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது. ஆனால், பயன்படுத்தப் பட்ட நீரை, நக ராட்சி நிர்வாகம் நீர் நிலைகளில் விடப்போவதாக தவறான தகவல் பணிசெய்ய விடா மல் வார்டு மக்களை சிலர் தூண்டி விட்டு போராட் டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் பொதுமக்கள் வீண் வதந்திகளை நம்பாமல், நகராட்சி நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகி றது. மேலும், பொதுமக்க ளின் சந்தேகங்களுக்கு, நகராட்சி நிர்வாகத்தினை அணுகி தெளிவு பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கமிஷனர் அருள் அறிக்கையில் இவ்வாறு கூறி. யுள்ளார்.
Next Story