மின் வாரியம் முக்கிய அறிவிப்பு.

மின் வாரியம் முக்கிய அறிவிப்பு.
X
மதுரை மாவட்டத்தில் மின் பயனீட்டாளர்கள் குறைதீர்க்கும் முகாம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை மாவட்டத்தில் பொதுமக்கள் தங்களது மின் இணைப்பில் மின் கணக்கீடு செய்ததில் ஏதேனும் குளறுபடி, பழுதடைந்த மீட்டர், உங்கள் பகுதியில் பழுதான மின்கம்பங்கள் உள்ளதா அல்லது குறைந்த அழுத்த மின் பிரச்சனை உள்ளதா அதற்கு தீர்வுகாணும் நோக்கில், நாளை மறுநாள் 5ம் தேதி காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட இடங்களில் மின் பயனீட்டாளர்களுக்காக சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. மதுரை கிழக்கு உதவி மின் பொறியாளர் அலுவலகம், திருமங்கலம் செயற்பொறியாளர் அலுவலகம், திருமங்கலம், சமயநல்லூர் செயற்பொறியாளர் அலுவலகம் சமயநல்லூர், உசிலம்பட்டி செயற்பொறியாளர் அலுவலகம் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது என மின் வாரியம் அறிவித்துள்ளது.
Next Story