ராமநாதபுரம் கஞ்சா கடத்திய இருவர் கைது

மண்டபம் நோக்கி வந்த சென்னை விரைவு ரயில் முன்பதிவு இல்லாத பெட்டியில் பயணித்த பயணியிடமிருந்து 19 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல்: வட மாநிலத்தைச் சேர்ந்த இருவர் கைது.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ரயில் நிலையம் நோக்கி வந்த சென்னை விரைவு ரயில் முன்பதிவு இல்லாத பெட்டியில் பயணித்த சந்தேகத்திற்கு இடமான பயணிகளின் உடைமைகளை சோதனை செய்ததில் பயணி உடமைகளில் இருந்து 19 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டதன் அடிப்படையில் வட மாநிலத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர். ரயில்வே காவல்துறை இயக்குனர் வன்னிய பெருமாள் உத்தரவின் பெயரில், ரயில்வே காவல்துறை தலைவர் பாபு மற்றும் ரயில்வே காவல்துறை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜன் மேற்பார்வையில் ரயில்களில் பயணிக்கும் பெண் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைக்காக இருப்பு பாதை போலீசாரை கொண்டு சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த சிறப்புக்குழு ரயில்களில் திடீர் சோதனை மற்றும் முழு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் இந்நிலையில் சென்னை எழும்பூரில் இருந்து மண்டபம் ரயில் நிலையம் நோக்கி வந்த ராமேஸ்வரம் விரைவு ரயிலில் முன்பதிவு இல்லாத பெட்டியில் திருச்சி ரயில் நிலையத்திலிருந்து மண்டபம் ரயில் நிலையம் வரை பயணம் செய்த பயணிகளின் உடைமைகளை இன்று அதிகாலை இருப்பு பாதை போலீசார் சிறப்பு குழு திடீர் சோதனை நடத்தினர். அப்போது சந்தேகத்திற்கு இடமான முறையில் ரயிலில் பயணம் செய்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு பயணிகளின் உடைமைகளை சோதனை செய்த போது அதில் 19.700 கிலோ கஞ்சா பொட்டலங்கள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது இதையடுத்து கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்த இருப்பு பாதை போலீசார் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பிரதேஷ் மொகாந்தி (28) மற்றும் பிரியா பாரத் மொகாந்தி (40) ஆகிய இருவரையும் பிடித்து ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் வைத்து ராமநாதபுரம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இரு பயணிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.3 லட்சம் இருக்கும் எனவும், ரயிலில் பயணம் செய்யும் பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய ரயில்வே துறை ரயில்வே காவல்துறையினர் சிறப்பு குழு அமைப்பு முழு கண்காணிப்பில் ஈடுபட்டு வரகின்றனர். மேலும் ரயிலில் சட்டவிரோதமாக போதைப் பொருள் கடத்தல் சம்பவங்கள் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே காவல்துறை எச்சரித்துள்ளனர்.
Next Story