வாலாஜாபேட்டையில் கஞ்சா வழக்கில் தேடப்பட்டவர் கைது!

வாலாஜாபேட்டையில் கஞ்சா வழக்கில் தேடப்பட்டவர் கைது!
X
கஞ்சா வழக்கில் தேடப்பட்டவர் கைது!
வாலாஜாபேட்டை எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் பால் மணி (வயது 54). கடந்த 2012-ம் ஆண்டு 30 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக பால்மணியை சிப்காட் போலீசார் கைது செய்தனர்.இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. ஜாமீனில் வெளி வந்த பால் மணி விசாரணைக்கு ஆஜராகாமல் கடந்த 11 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தார். அவருக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப் பட்டது. இந்த நிலையில் துணை எஸ் பி இமயவ ரம்பன், இன்ஸ்பெக்டர் சசிக்குமார் ஆகியோர் அடங்கிய தனிப் படை போலீசார் பால் மணியை நேற்று கைது செய்து சேலம் சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
Next Story