ஆட்டுப்பாக்கம் ரெயில்வே கேட் மூடல்

ஆட்டுப்பாக்கம் ரெயில்வே கேட் மூடல்
X
ஆட்டுப்பாக்கம் ரெயில்வே கேட் மூடல்
அரக்கோணம் -செங்கல்பட்டு இடையே உள்ள ரெயில் பாதையில் சேந்தமங்கலம், மஞ்சம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இன்று (வியாழக்கிழமை) ஆட்டுப்பாக்கம் ரயில்வே கேட் அருகே பணிகள் நடைபெற உள்ளது. அதன் காரணமாக இன்று இரவு 9 மணி முதல் நாளை 4-ம் தேதி காலை 6 மணி வரை ஆட்டுப்பாக்கம் ரயில்வே கேட் தற்காலிகமாக மூடப்படு வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் தனியார் மற்றும் அரசு பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் மாற்றுப் பாதையை பயன்படுத்த வேண்டும் என ரயில்வே அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Next Story