கோவை: லாரி டிரைவர் அடித்து கொலை - கேரள குற்றவாளி கைது !

X
திண்டுக்கல் மாவட்டம் மணியாரம்பட்டியைச் சேர்ந்த ஆறுமுகம் (35) லாரி ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார். இவர் போத்தனூர் செட்டிப்பாளையத்தில் வாடகை வீடு எடுத்து தங்கி இருந்தார். அதே வீட்டில் கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்த சியாஸ் (35) என்பவரும் தங்கி இருந்தார். கடந்த 25 ஆம் தேதி இரவு, இருவரும் மது அருந்தியுள்ளனர். அப்போது சியாஸ் டிவியில் அதிக சத்தம் வைத்து பாட்டு கேட்டுக் கொண்டிருந்தார். தூங்க வேண்டும் என்பதால், சத்தத்தை குறைக்கும்படி ஆறுமுகம் கூறினார். ஆனால், சியாஸ் சத்தத்தை குறைக்கவில்லை. இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது. ஆத்திரமடைந்த சியாஸ், மது பாட்டிலை உடைத்து ஆறுமுகத்தை சரமாரியாக குத்தினார். இதில் பலத்த காயமடைந்த ஆறுமுகம் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து சுந்தராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து சியாஸை தேடி வந்த நிலையில் மதுக்கரை பகுதியில் நேற்று மது அருந்திவிட்டு பாலத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஆம்புலன்ஸ் வருவதை பார்த்து போலீஸ் வாகனம் என நினைத்து பாலத்தில் இருந்து கீழே குதித்த. அவருக்கு காலில் காயம் அடைந்த அவரை 108 ஆம்புலன்சில் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்த போலீசார், நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
Next Story

