ராணிப்பேட்டையில் மின்நுகர் வோருக்கான சிறப்பு முகாம்!

X

மின்நுகர் வோருக்கான சிறப்பு முகாம்!
வேலூர் மின் பகிர்மான வட்டம் ராணிப்பேட்டை கோட்டம் செயற் பொறியாளர் அலுவலகத்தில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை மின்நுகர் வோருக்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. மின்சார கட்டணம் தொடர்பாக, பழுதடைந்த மின் அளவி மாற்றம், பழுதடைந்த மின் கம்பம் மாற்றம், மின்னழுத்தம் குறைபாடு தொடர்பாக உள்ள குறைகளை முகாமில் நேரில் கலந்து கொண்டு மனு அளித்து குறைகளை நிவர்த்தி செய்து மின்நுகர் வோர்கள் பயன்பெறலாம். இந்த தகவலை மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக செயற் பொறியாளர் எஸ்.விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
Next Story