சேலம்- அரக்கோணம் ரெயில் நாளை முதல் மீண்டும் இயக்கம்

சேலம்- அரக்கோணம் ரெயில் நாளை முதல் மீண்டும் இயக்கம்
X
ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு
சேலம்- அரக்கோணம், அரக்கோணம் - சேலம் மெமு ரெயில் கடந்த 2 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் மீண்டும் அந்த ரெயில் சேவையை இயக்க ரெயில்வே நிர்வாகம் முன் வந்துள்ளது. அதன்படி சேலம் - அரக்கோணம் மெமு ரெயில் (16088) நாளை (வெள்ளிக்கிழமை) முதல் சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 3.30 மணிக்கு புறப்பட்டு இரவு 8.45 மணிக்கு அரக்கோணம் சென்றடையும். இதேபோல் அரக்கோணத்தில் இருந்து காலை 5.15 மணிக்கு புறப்படும் மெமு ரெயில் (16087) காலை 10.50 மணிக்கு சேலம் வந்தடையும். இந்த ரெயில் சேவை வாரத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற 5 நாட்கள் இயக்கப்படும் என்றும் ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. சேலம்- அரக்கோணம் இடையே மீண்டும் ரெயில் இயக்கப்படும் என்ற அறிவிப்பு ரெயில் பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Next Story