மழலையர் பள்ளி பட்டமளிப்பு விழா

மழலையர் பள்ளி பட்டமளிப்பு விழா
X
கொல்லங்கோடு
கொல்லங்கோடு அருகே கொற்றாமத்தில் மழலையர்களுக்கான பாத்திமா பப்ளிக் பள்ளி உள்ளது. இந்த பள்ளி பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில்  பள்ளி முதல்வர் சானியா ஜான், பள்ளி நிர்வாக அதிகாரி ராஜேந்திர பாபு, துணை முதல்வர் வரலட்சுமி பிரசாத் மற்றும் கரடி பத் பயிற்சியாளர் மாதவி வாரியார் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர்.       காலை அமர்வில் தலைமை விருந்தினராக மாதவி வாரியார் கலந்து கொண்டு குழந்தைகள் எளிமையாக ஆர்வத்துடன் கற்பதற்கான புதுமையான வழிமுறைகள் குறித்தும், குழந்தைகளின் படைப்பாற்றல் குறித்தும் பேசினார்.       இரண்டாம் அமர்வில் தலைமை விருந்தினராக சுரக்ஷா மருத்துவமனை மருத்துவர் அபிஷா மோள் இளம் குழந்தைகளின் ஆரோக்கியமான வாழ்விற்கு என்னென்ன உணவு முறைகளை பின்பற்ற வேண்டும் என்று பேசினார். தொடர்ந்து மாணவர்களின் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் மாணவ மாணவிகள் பெற்றோர் மற்றும்  ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
Next Story