ராமநாதபுரம் புதிய பேருந்து சேவை இயக்கம்

கமுதி ஊராட்சி ஒன்றியம் நெறிஞ்சிப்பட்டி கிராமத்திற்கு புதிய வழித்தட அரசு பேருந்து சேவை இயக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர், தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆர், எஸ், ராஜகண்ணப்பன் நடவடிக்கையின் பெயரில் பொது மக்களின் கோரிக்கையை ஏற்று முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம் சிறுதலை ஊராட்சி வாத்தியனேந்தல் கிராமத்திற்குகூடுதல் நேரத்தில் அரசுபேருந்து சேவை இயக்கப்பட்டது. கமுதி ஊராட்சி ஒன்றியம் நெறிஞ்சிப்பட்டி கிராமத்திற்கு புதிய வழித்தட அரசு பேருந்து சேவை இயக்கப்பட்டது. முதுகுளத்தூர் அருகே வீரம்பல் கிராமத்திற்கு புதிய வழித்தட அரசு பேருந்து சேவையை இயக்கப்பட்டது. அனைத்து புதிய வழித்தடத்தில் பேருந்துகள் சேவை துவக்க நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள், போக்குவரத்து கழக அதிகாரிகள் மற்றும் கிராம பொது மக்கள் கலந்து கொண்டனர். தமிழக அரசுக்கும் அமைச்சர் அவர்களுக்கும் பொது மக்கள் நன்றி தெரிவித்தனர்.
Next Story