கோவை: மருதமலையில் அதிர்ச்சி- கும்பாபிஷேகத்திற்கு முன் வெள்ளி வேல் திருட்டு!

X

மருதமலை கோவிலின் அடிவாரத்தில் உள்ள வேல் கோட்டம் தியான மண்டபத்தில் இருந்து சுமார் இரண்டரை அடி உயரமுள்ள, நான்கு லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெள்ளி வேல் திருடப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர், மருதமலையில் உள்ள புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கோவிலை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், நேற்று மதியம் 12 மணியளவில் ஒரு அதிர்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. கோவிலின் அடிவாரத்தில் உள்ள வேல் கோட்டம் தியான மண்டபத்தில் இருந்து சுமார் இரண்டரை அடி உயரமுள்ள, நான்கு லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெள்ளி வேல் திருடப்பட்டுள்ளது. சிசிடிவி காட்சிகளின் மூலம், சாமியார் வேடத்தில் வந்த ஒரு நபர் இந்த திருட்டை நிகழ்த்தியிருப்பது தெரியவந்துள்ளது. நாளை கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில், கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இருந்தும், பட்டப்பகலில் நடந்த இந்த திருட்டு சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து வடவள்ளி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளியை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
Next Story