வாணியம்பாடியில் கஞ்சா வழக்கில் தொடர்புடைய இளைஞரை போலீசார் பிடிக்க முயன்ற போது கால் உடைப்பு

வாணியம்பாடியில் கஞ்சா வழக்கில் தொடர்புடைய இளைஞரை போலீசார் பிடிக்க முயன்ற போது கால் உடைப்பு
X
வாணியம்பாடியில் கஞ்சா வழக்கில் தொடர்புடைய இளைஞரை போலீசார் பிடிக்க முயன்ற போது கால் உடைப்பு
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் கஞ்சா வழக்கில் தொடர்புடைய இளைஞரை போலீசார் பிடிக்க முயன்ற போது கால் உடைப்பு போலீசார் தாக்கியதில் தான் கால் உடைந்ததாக உறவினர்கள் குற்றச்சாட்டு திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நேதாஜி நகர், காளியம்மன் கோயில் அருகே கஞ்சா விற்பனை செய்து வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தாவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன் அடிப்படையில் எஸ்பி தனிப்படை எஸ் ஐ ராஜேஷ் தலைமையிலான போலீசார் கடந்த மாதம் 19 ஆம் தேதி அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது காவல்துறையினர் வருவதை கண்ட இளைஞர்கள் சிலர் அங்கிருந்து தப்ப முயன்ற போது போலீசார் அவர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர்.அப்போது அவர்களிடம் விசாரணை நடத்திய போது அந்த இளைஞர்கள் நேதாஜி நகர் பகுதியைச் சேர்ந்த கௌதம் (வயது 21), ராஜேஷ் (வயது 21), விநாயகம் (வயது 21), மற்றும் மருத்துவர் காலனி பகுதியைச் செல்வம் (வயது 25), சந்தோஷ் (வயது 23) என்பதும் அவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது. தெரிய வந்தது. அதன் பின்னர் அவர்களிடமிருந்து 1.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து மேலும் கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய ஒரு இருசக்கர வாகனம், ஒன்பது செல்போன்கள் மற்றும் போட்டோ கேமரா ஆகியவற்றை பறிமுதல் செய்யப்பட்டு அவர்களை வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர் மேலும் இதில் தொடர்புடைய முக்கிய நபர் ராஜசேகர் என்பவரை போலீசார் தேடி வந்த நிலையில் நேதாஜி நகர் பகுதியில் கோவில் அருகில் ராஜசேகர் பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் காவல்துறையினர் அங்கு சென்று ராஜசேகரை பிடிக்க முயன்ற போது கீழே விழுந்து எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் அவரை வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர் ஆனால் ராஜசேகரின் மனைவி மற்றும் குடும்பத்தினர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த ராஜசேகரை பார்த்து விட்டு மருத்துவமனை முன்பு காவல்துறையினர் தனது கணவரின் காலை உடைத்து விட்டு பிடிக்க முயன்ற போது கீழே விழுந்ததாக நாடகம் ஆடுகின்றனர் மேலும் ராஜசேகர் தலைமறைவாக இருந்தபோது பெண்களை காவல் நிலையத்திற்கு வரும்படி காவல்துறையினர் மிரட்டியதாக குற்றச்சாட்டு தெரிவித்ததால் மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story