திருச்சி அரசு மருத்துவமனையில் ஆட்டிசம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்சி அரசு மருத்துவமனையில் ஆட்டிசம் விழிப்புணர்வு நிகழ்ச்சி
X
ஆட்டிசம் என்பது நோயல்ல குணப்படுத்தக்கூடியது- பெற்றோர்களுக்கு மருத்துவர்கள் அறிவுரை
திருச்சி அரசு மருத்துவமனையில் இந்திய குழந்தைகள் மருத்துவ கழகம் சார்பில் ஆட்டிசம் விழிப்புணர்வு தினத்தையொட்டி "சக்தி அளிக்கும் உதவியின் குரல்கள் என்ற தலைப்பில் அரசு மருத்துவமனை முதல்வர் குமரவேல் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆட்டிசம் பாதிக்கப்பட்ட ஏராளமான குழந்தைகளுடன் பெற்றோர்கள் வந்திருந்து தங்கள் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு செய்தியை பெற்றுக்கொண்டனர். இந்நிகழ்வில் ஆட்டிசம் என்பது ஒரு நோயல்ல, மூளை வளர்ச்சி குறைபாடு வேறு, சில குறைபாடுகளுக்கு வரலாம், மாறுதல் இருக்கலாம். ஆட்டிசம் உள்ள குழந்தைகளின் பெற்றோர்கள் கவலைப்பட தேவையில்லை. பெரிய விஞ்ஞானிகளான ஐசக் நியூட்டன் போன்றவர்கள் ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளாக இருந்துள்ளனர். இந்த குழந்தைகளுக்கு நம்முடைய உதவி, ஆலோசனை இருந்தாலே போதும். குணப்படுத்தி விடலாம். இது போன்ற குழந்தைகளுக்கு கண்ணில் பார்த்து பேசும் தன்மை இருக்காது. தானாக பேசிக்கொண்டு தனி உலகத்திலே அவர்கள் இருப்பார்கள். ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கவனிக்கும்திறன் இருக்கும். அதற்குரிய மருத்துவங்களும் தற்போது உள்ளது. குழந்தைகளுக்கு பால் ஊட்டும் போதும் உணவு கொடுக்கும் போதும் செல்போனை கொடுப்பதை குறைக்க வேண்டும் என பெற்றோருக்கு அறிவுறுத்தப்பட்டது.
Next Story