போடி அருகே மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு

X

போலீசார் விசாரணை
போடி அருகே மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் போதுமணி (54). இவர் நேற்று (ஏப்.2) அப்பகுதியில் உள்ள ஜெயராஜ் என்பவரின் வயலில் வேலை செய்வதற்காக சென்றுள்ளார். வயல் அருகே மின் கம்பத்தில் இருந்த மின் கம்பி அருந்து கீழே விழுந்து கிடந்துள்ளது. இதனை கவனிக்காமல் போதுமணி நடந்து சென்ற போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இது குறித்து போடி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.
Next Story