போடி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூன்று பேர் கைது

X

கஞ்சா
தேனி மதுவிலக்கு பிரிவு போலீசார் நேற்று (ஏப்.2) போடி தீர்த்த தொட்டி பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்பொழுது அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த மாதவன், முத்துக்குமார் ஆகியோரிடம் சோதனை மேற்கொண்டதில் அவர்கள் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் கைது செய்தனர். அவர்கள் அளித்த தகவலின்படி தர்மா என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
Next Story