தேவதானப்பட்டியில் சட்ட விரோதமாக மது விற்றவர் கைது

X
தேவதானப்பட்டி காவல் நிலைய போலீசார் நேற்று (ஏப்.2) குற்றத்தடுப்பு சம்பந்தமாக கெங்குவார்பட்டி பகுதியில் ரோந்து மேற்கொண்டனர். அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த சையது என்பவரிடம் சோதனை செய்த போது அவரிடம் சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் சையது மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
Next Story

