ஜெயமங்கலத்தில் கடனை கட்ட முடியாமல் பெண் தற்கொலை

X
ஜெயமங்கலம் அருகே எருமலைநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சந்திரா (50). இவர் வீடு கட்டுவதற்காக தனியார் வங்கியில் கடன் வாங்கியுள்ளார். கடந்த இரண்டு மாத காலமாக அதற்கான தவணைத் தொகையை செலுத்த முடியாமல் இருந்த நிலையில் பேங்க் ஊழியர்கள் பணத்தினை கேட்டுள்ளனர். இதனால் மன வேதனை அடைந்த சந்திரா நேற்று (ஏப்.2) அரளி விதையை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஜெயமங்களம் போலீசார் விசாரணை.
Next Story

