ஜெயமங்கலத்தில் சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்றவர் கைது

X
ஜெயமங்கலம் காவல் நிலைய போலீசார் நேற்று (ஏப்.2) மருகால்பட்டி அருகே ரோந்து பணி மேற்கொண்டனர். அப்பொழுது அப்பகுதியில் அட்டைப்பெட்டியுடன் சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த ஈஸ்வரன் என்பவரை சோதனை செய்த பொழுது அவர் வெளி மாநில மது பாட்டில்கள் வைத்து இருந்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து 154 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் ஈஸ்வரன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
Next Story

