உடல் உறுப்புகள் தானம் செய்தவருக்கு அரசு சார்பில் மரியாதை

உடல் உறுப்புகள் தானம் செய்தவருக்கு அரசு சார்பில் மரியாதை
X
உடல் உறுப்புகள் தானம் செய்தவர்
நெல்லை மாவட்டம் களக்காடு ஜே.ஜே நகர் பகுதியை சார்ந்த மாரியப்பன் என்பவரின் மனைவி சீதை மூளைச்சாவு அடைந்ததால் அவர்களது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது. அன்னாரது உடலிற்கு இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் சுகுமார் தமிழ்நாடு அரசின் சார்பில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வின்போது மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர்.ரேவதி பாலன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
Next Story