கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி துவக்க விழா.

X
திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியம், அத்திக்கடை ஊராட்சியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கீழ் கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையம் சார்பில் சணல் பை தயாரிப்பு பயிற்சி மற்றும் ஆரி எம்ராய்டரி பயிற்சி துவக்க விழா திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் வ.மோகனச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. திருவாரூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கீழ், கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையம் சார்பில் குளிர்சாதன உபகரணங்கள் பழுதுநீக்கல் மற்றும் பராமரித்தல், செல்போன் பழுதுநீக்கல் பயிற்சி, இரு சக்கர வாகனம் பழுதுநீக்கல் பயிற்சி, புகைப்பட கலை (அடிப்படை) மற்றும் வீடியோ கிராபி, தொழில்முறை கார் ஓட்டுனர் பயிற்சி, கணினி மென்பொருள் மற்றும் வலைப்பின்னல், வயரிங் மற்றும் மின் உபகரணங்கள் பழுது நீக்கல், வாஷிங்மெஷின், கிரைண்டர், மிக்ஷி, ப்ளம்மிங் மற்றும் சானிடரி ஒர்க்ஸ், அழகுக்கலை பயிற்சி – மகளிருக்கு, தையற்கலை பயிற்சி – மகளிருக்கு, தையல் துணியில் எம்ப்ராய்டரி டிசைன் மற்றும் வண்ணம் தீட்டுதல் பயிற்சி என 30 நாட்கள் பயிற்சி வகுப்புகளும், சணல் பொருட்கள் தயாரித்தல், சிசிடிவி கேமரா, புகைப்படக்கருவி அமைத்தல் மற்றும் பழுதுநீக்கல் பயிற்சி என 13 நாட்கள் பயிற்சி வகுப்புகளும், தேனீ வளர்த்தல், ஆடு வளர்த்தல், காய்கறி நாற்றாங்கால், காய்கறி சாகுபடி மற்றும் பராமரித்தல், மருத்துவ மற்றும் நறுமண தாவரங்கள் சாகுபடி, பன்றி வளர்த்தல், மூங்கில் மற்றும் மூங்கில்சார் பொருட்கள் தயாரிப்பு என 10 நாட்கள் பயிற்சி வகுப்புகளும் கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையம் மூலம் நடத்தப்பட்டுவருகிறது.
Next Story

