அபிராமசுந்தரி அலங்காரத்தில் திருவீதி உலா

திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
மாரியம்மன் காளியம்மன் திருக் கோயிலில் 18 ஆம் நாளான இன்று பல்வேறு கண்கவர் பாரம்பரிய கலைநிகழ்வுகளுடன் ஸ்ரீ அபிராம சுந்தரியாக பூபல்லாக்கில் உலா வந்தார் ஊட்டி மாரியம்மன் கோவில் தேர்திருவிழா துவங்கி நடைபெற்று வருகிறது . ஊட்டியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் முதல் ஏப்., இரண்டாவது வாரம் வரை பல வேறு சமூகத்தை சேர்ந்தவர்களால் உபயம் நிகழ்ச்சி சிறப்பாக நடத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக தேர் பவனி நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது" அருள்மிகு மாரியம்மன் காளியம்மன் திருக் கோயிலில் 18 ஆம் நாளான இன்று ( வியாழக்கிழமை ) உதகை செங்குத்து முதலியார் ஐங்கமர் சமூகத்தினரின் உபயம் நடைபெற்றது இதில் பல்வேறு கண்கவர் பாரம்பரிய கலைநிகழ்வுகளுடன் ஸ்ரீ அபிராம சுந்தரி பூபல்லாக்கில் உலா வந்தார்
Next Story