உள்ளாட்சி பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

X

உள்ளாட்சி பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அனைத்து அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் அனைத்து உள்ளாட்சி பணியாளர்கள் சங்கம் சார்பாக முதன்மை ஒருங்கிணைப்பாளர் சரவணகுமார் தலைமையில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் - நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு... விருதுநகர் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முன்பு அனைத்து அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் அனைத்து உள்ளாட்சி பணியாளர் சங்கம் சார்பாக முதன்மை ஒருங்கிணைப்பாளர் சரவணகுமார் தலைமையில் தமிழ்நாடு அரசு தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியின்படி காலம் தாழ்த்தாமல் பங்களிப்பு ஓய்வு திட்டத்தின் ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தினை அமல்படுத்திட வேண்டும், அரசு அலுவலர்களுக்கு வழங்கிய ஏழாவது ஊதியக்குழுநிர்ணயத்தில் 21 மாதம் நிலுவை தொகையினை பணியாளர்களுக்கு வழங்காமல் நிலுவையாக உள்ளதால் அதனை விடுவித்து நிலுவைத் தொகையினை வழங்கிட வேண்டும் , தலைமைச் செயலகம் முதல் அனைத்து துறைகளிலும் உள்ள அனைத்து பிரிவு காலி பணியிடங்களையும் நிரப்பி அவர்களுக்கு பதவி உயர்வினையும் வழங்கிட வேண்டும், தமிழகத்தில் பணிபுரியும் ஓட்டுநர்கள் 7, 14 மற்றும் 20 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு மருத்துவர்களுக்கு வழங்குவது போல் முறையே நிலை 1, 2, 3, நிலை அடிப்படையில் பதவிஉயர்வினை வழங்கிட வேண்டும் ,மாநகராட்சி நகராட்சி, பேரூராட்சி மற்றும் 12527 கிராம ஊராட்சியில் பணிபுரியும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும், உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
Next Story