திருவாரூர் மாவட்டத்தில் பரவலாக மழை - பொதுமக்கள் மகிழ்ச்சி.

திருவாரூர் மாவட்டத்தில் பரவலாக  மழை -  பொதுமக்கள் மகிழ்ச்சி.
X
திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பெய்த மழையின் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி.
தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இன்று மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் திடீரென காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக திருவாரூர், சன்னாநல்லூர், கஞ்களாஞ்சேரி, கண்கொடுத்தவணிதம், அடியக்கமங்கலம், புலிவலம் , மணலி , திருத்துறைப்பூண்டி, கூத்தாநல்லூர், பேரளம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. கடந்த சில தினங்களாக பகலில் கடுமையான வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் திடீரென பெய்த மழை குளிர்ச்சியான சூழலை உண்டாக்கி பொதுமக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story