சண்டையை சமாதானம் செய்ய சென்ற கொத்தனாரை கத்தியால் குத்தி கொலை.

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே இருவரின் சண்டையை சமாதானம் செய்யச் சென்ற ஒருவரை குத்திக் கொலை செய்து பரிதாபம்.
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட பெரும்புகளூர் தெற்குத் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பாலையன் என்பவரின் மகன் பாலமுருகன் வயது 52.இவர் கொத்தனாராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் பெரும்புகளூர் தெற்கு தெருவை சேர்ந்த மாதவன் அவரது சித்தப்பா முருகையன் ஆகியோருக்கு நேற்று மாலை பிரச்சனை ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு வந்த பாலமுருகன் இருவரையும் சமாதானம் செய்ய முயற்சி செய்துள்ளார்.அப்போது ஆத்திரமடைந்த மாதவன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பாலமுருகனை விலாவில் குத்தியுள்ளார்.இதில் ரத்த வெள்ளத்தில் அவர் சரிந்தார். இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து நன்னிலம் போலீசார் வழக்கு பதிவு செய்து மாதவனை கைது செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
Next Story