கோயில் குளத்தில் அம்மன் சிலையின் தலைப்பகுதி கண்டெடுப்பு

X
திருவானைக்காவலில் உள்ள சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேஸ்வரி கோயிலுக்கு சொந்தமான ராமா் தீா்த்தக் குளத்தில் தற்போது புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், வியாழக்கிழமை குளத்தின் முள்புதரில் கற்சிலை அம்மனின் தலைப் பகுதி மட்டும் தனியாக கிடந்தது தெரிந்தது. இந்தச் சிலையின் முழு வடிவம் கிடைக்கவில்லை. தலைப்பகுதி மட்டும் கிடைக்கப்பட்ட இந்தச் சிலை காளி சிலையாக இருக்கக் கூடும் என்று அப்பகுதியினா் தெரிவித்தனா். சிலை குறித்த விவரங்கள் உடனடியாக தெரியவில்லை. ராமா் தீா்த்தக் குளம் பல ஆண்டுகளாக தூா்வாரப்படாமல் இருந்ததால், இந்தக் குளத்துக்குள் அதிக அளவில் கற்சிலைகள் மற்றும் புராதன கால சிற்பங்கள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. பழைமையான இந்தக் குளத்தை தூா்வார இந்து சமய அறநிலையத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
Next Story

