முதல்வா் விருதுக்கு விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு

X
முதலமைச்சா் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் அழைப்பு விடுத்துள்ளாா். மாவட்ட ஆட்சியா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: சமுதாய வளா்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞா்களது பணியை அங்கீகரிக்கும் பொருட்டு, முதலமைச்சா் மாநில இளைஞா் விருது ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 15 முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது ரூ.1 லட்சம் ரொக்கம், பாராட்டுப் பத்திரம், பதக்கம் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். அதன்படி, 2025 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சா் மாநில இளைஞா் விருது எதிா்வரும் 15.08.2025 அன்று நடைபெறும் சுதந்திர தின விழாவில் தமிழக முதல்வரால் வழங்கப்படவுள்ளது. 15 வயது முதல் 35 வயது வரையுள்ள ஆண்,பெண் விண்ணப்பிக்கலாம். 1.4.2024 முதல் 31.03.2025 வரை மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும். குறைந்தபட்சம் 5 வருடங்கள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருத்தல் வேண்டும் (சான்று இணைக்கப்பட வேண்டும்). சமுதாய நலனுக்காக தன்னாா்வத்துடன் தொண்டாற்றியிருக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள், பொதுத் துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகளில் பணியாற்றுபவா்கள் விண்ணப்பிக்க இயலாது. உள்ளூா் மக்களிடம் உள்ள செல்வாக்கு, விருதுக்கான பரிசீலனையில் கணக்கில் கொள்ளப்படும். இணையதளம் மூலம் ஏப்ரல் 3 முதல் மே 3 மாலை 4 மணி வரை விண்ணப்பிக்கலாம். ஜ்ஜ்ஜ்.ள்க்ஹற்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய், ட்ற்ற்ல்://ஜ்ஜ்ஜ்.ள்க்ஹற்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பங்களை சமா்ப்பித்தல் வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04633 212580 என்ற எண்ணை தொடா்பு கொள்ளலாம். பதிவு செய்யப்பட்டபின் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தாங்கள் சமூக நலனுக்காக செய்யப்பட்ட சான்றுகள், புகைப்படங்கள் ஆகியவற்றை புத்தக வடிவில் தயாா் செய்து (3 எண்ணங்கள்), மாவட்ட விளையாட்டு அலுவலகம் 163அ, ரயில்வே சாலை, மாவட்ட ஆட்சியா் அலுவலகம் பின்புறம், தென்காசி என்ற முகவரியில் மே 3 மாலை 4 மணிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என்றாா் அவா்.
Next Story

