சங்கரன்கோவிலில் மதிமுக சாா்பில் நல உதவிகள் வழங்கினர்

சங்கரன்கோவிலில் மதிமுக சாா்பில் நல உதவிகள் வழங்கினர்
X
மதிமுக சாா்பில் நல உதவிகள் வழங்கினர்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் தென்காசி வடக்கு மாவட்ட மதிமுக மற்றும் நகர மதிமுக சாா்பில் நல உதவிகள் வழங்கப்பட்டன. மதிமுக முதன்மைச் செயலா் துரை வைகோ பிறந்த தினத்தையொட்டி நடைபெற்ற விழாவில், மதிமுக மாநில துணைப் பொதுச் செயலா் தி.மு ராசேந்திரன் பங்கேற்று, பரிபவுல் மனவளா்ச்சி குன்றியோா் பள்ளியில் சிறப்பு குழந்தைகளுக்கு நல உதவிகள் வழங்கினாா். இதன் பின்னா் மதிமுகவினா் சங்கரநாராயண சுவாமி கோயிலில் தங்கத் தோ் இழுத்தனா். விழாவில் தென்காசி வடக்கு மாவட்ட செயலா் இல.சுதா பாலசுப்பிரமணியன், மாநில இளைஞரணி துணைச் செயலா் இசக்கியப்பன், மாவட்ட துணைச் செயலா் பொன்.ஆனந்தராஜ், பொதுக்குழு உறுப்பினா் வெங்கடாஜலபதி, மணி, நகர செயலா் ரத்னவேல்குமாா், மாவட்ட இளைஞரணி துணைச் செயலா் முகம்மது ஹக்கீம், குருவிகுளம் ஒன்றியக் குழு தலைவா் விஜயலட்சுமி, துணைத் தலைவா் முருகேஸ்வரி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story