சிவகிரி வட்டாரத்தில் பலத்த மழை: வெற்றிலை கொடி நாசம்

சிவகிரி வட்டாரத்தில் பலத்த மழை: வெற்றிலை கொடி நாசம்
X
சிவகிரி வட்டாரத்தில் பலத்த மழை: வெற்றிலை கொடி நாசம்
தென்காசி மாவட்டம் சிவகிரி வட்டார பகுதிகளில் நேற்றுகாலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்த நிலையில், மாலை முதல் இரவு வரை பலத்த காற்று, இடியுடன் மழை பெய்தது. இதனால் சாலைகள் மற்றும் தெருக்களில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. சில இடங்களில் மரங்கள் சாய்ந்தன. சிவகிரி வடகால், பெரியகுளம் பகுதியில் பல ஏக்கரில் வெற்றிலை சாகுபடி செய்யப்பட்டிருந்த நிலையில், பலத்த மழை மற்றும் காற்றின் காரணமாக வெற்றிலை கொடிக்கால் நாசம் அடைந்தது. இதனால் பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வெற்றிலை விவசாயிகள் தெரிவித்தனா். மேலும், உரிய நிவாரணம் வழங்கவும் கோரிக்கை விடுத்துள்ளனா்.
Next Story