நத்தக்காடையூர் ஜெயங்கொண்டீஸ்வரர் கோவிலில் பாலமுருகனுக்கு பங்குனி சஷ்டி அபிஷேகம்

நத்தக்காடையூர் ஜெயங்கொண்டீஸ்வரர் கோவிலில் பாலமுருகனுக்கு  பங்குனி சஷ்டி அபிஷேகம்
X
நத்தக்காடையூர் பாலமுருகன் கோவிலில் பங்குனி சஷ்டி அபிஷேகம்
நத்தக்காடையூர் பாலசவுந்தரவல்லி உடனமர் ஜெயங் கொண்டேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள பாலமுருகனுக்கு பங்குனி மாத சஷ்டி சிறப்பு அபிஷேக பூஜை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு பாலமுருகனுக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், திருமஞ்சனம் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, புதிய பட்டாடை உடுத்தப்பட்டு, சிறப்பு மலர் அலங்காரத்துடன் மகா தீபாராதனை பூஜை நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பங்குனி சஷ்டி மாத வழிபாட்டு குழுவினர் செய்திருந்தனர்.
Next Story