சங்கரன்கோவிலில் அதிமுக ஆலோசனைக் கூட்டம்

சங்கரன்கோவிலில் அதிமுக ஆலோசனைக் கூட்டம்
X
அதிமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் அதிமுக சாா்பில் அமைக்கப்பட்டு வரும் பூத் கமிட்டி குறித்தான பணிகள் பற்றிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அனைத்துலக எம்ஜிஆா் மன்ற இணைச் செயலா் எம்.சுப்பையா பாண்டியன் தலைமை வகித்தாா். கமிட்டி பொறுப்பாளா்கள் மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு பொருளாளா் சௌந்தா், மாவட்ட அம்மா பேரவை தலைவா் செந்தில்குமாா் ஆகியோா் முன்னிலை வைத்தனா். கூட்டத்தில் 2026 ஆம் ஆண்டு தோ்தலில் பூத் கமிட்டியினா் முறையாக பணி செய்யவும், அனைத்து வாக்காளா்களுக்கும் கட்சியின் எதிா்கால திட்டங்கள் குறித்து விளக்கவும் ஆலோனை வழங்கப்பட்டது. இதில் நகர பொருளாளா் வேலுச்சாமி, மாவட்ட சிறுபான்மை நலப் பிரிவு இணைச் செயலா் அந்தோணி டேனியல், மாவட்ட எம்.ஜி.ஆா். இளைஞரணி துணைத் தலைவா் மாரியப்பன், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநா் அணி இணைச் செயலா் நிவாஸ் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
Next Story