சிவகிரி அருகே கஞ்சா விற்றவா் கைது

X
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே சிவகிரி காவல் உதவி ஆய்வாளா் வரதராஜன் தலைமையிலான போலீஸாா் சிவகிரி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது இரும்பு பாலம் அருகே வாசுதேவநல்லூா் தும்பைமேடு மந்தை தெருவைச் சோ்ந்த முத்துப்பாண்டியன் மகன் மருதுபாண்டி(26) கஞ்சா விற்றுக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடம் இருந்த 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
Next Story

