வாகன விபத்தில் சென்ட்ரிங் காண்ட்ராக்டர் பலி

X
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே கொண்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மொட்டையாண்டி மகன் பழனி குமார்(40) என்பவர் சென்ட்ரிங் கட்டட வேலை பார்த்து வந்தார். நேற்று (ஏப்.3) காலையில் வேலை விஷயமாக இரு சக்கர வாகனத்தில் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே தனிச்சியம் பிரிவு தனியார் சித்தா மருத்துவமனை அருகில் மதுரை திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்த போது, பெங்களூரில் இருந்து மதுரை நோக்கி வந்த ஆம்னி பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதியதில் சென்ட்ரிங் காண்ட்ராக்டர் பழனிக்குமார் சம்பவ இடத்தில் பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வாடிப்பட்டி போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இறந்த பழனி குமாருக்கு இந்துமதி என்று மனைவியும் லோகேஷ், தர்ஷினி ஆகிய குழந்தைகளும் உள்ளனர்.
Next Story

