பெரம்பலூர் கலெக்டர் கண்டித்து தாராபுரத்தில் ஆர்ப்பாட்டம்

X
தாராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசு ஊழியர் சங்க வட்டக்கிளை தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். வட்டக்கிளை செயலாளர் தில்லையப்பன் கோரிக்கை விளக்க உரையாற்றினர். இதில் பெரம்பலூர் மாவட்டம் ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகள் சம்பந்தமாக தமிழ் நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாநிலத்தலைவர் சீ.காந்திமதிநாதன், பொதுச்செயலாளர் க.பிரபு மற்றும் மாநில நிர்வாகிகளுடன் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத்தலைவர் மு.பாஸ்கரன் ஆகியோர் பெரம்பலூர் மாவட்ட திட்ட அலுவலர் மற்றும் கலெக்டர் கிரேஸ் லால்ரின்டிகி பச்சாவை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்து ஊழியர்களின் பிரச்சினை குறித்து பேச சென்றனர். அப்போது கலெக்டர் அந்த மனுவை கசக்கி எறிந்ததாக கூறப்படுகிறது. இதற்காக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் பெரம்பலூர் கலெக்டரை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப் பாட்டத்தில் மாவட்ட இணை செயலாளர் மேகலிங்கம் வாழ்த்துரை வழங்கினர். மாவட்டச் செயலாளர் பாலசுப்பிரமணியன் நிறைவுரை ஆற்றினார். இதில் தாராபுரம் அரசு ஊழியர்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.
Next Story

