காவேரிப்பட்டணம் அருகே மணல் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்

காவேரிப்பட்டணம் அருகே மணல் கடத்திய  டிப்பர் லாரி பறிமுதல்
X
காவேரிப்பட்டணம் அருகே மணல் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்
கிருஷ்ணகிரி மவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள மிட்டஅள்ளி வி.ஏ.ஒ. வனஜா மற்றும் அலுவலர்கள் அங்கினாம்பட்டி தீர்த்தமலை அருகே நேற்று முன்தினம் ரோந்துபணியில் ஈடுபட்டனர். அந்த பகுதியில் கேட்பாரற்று நின்ற லாரியை சோதனை செய்த போது அதில் இரண்டு யூனிட் மணல் அனுமதியின்றி எடுத்து வரப்பட்டது தெரிய வந்தது. இது குறித்து வி.ஏ.ஒ. கொடுத்த புகாரின் பேரில் காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணல் கடத்திய லாரியை பறிமுதல் செய்தனர்.
Next Story