கள்ளிப்பட்டி அருகே பெண் தீக்குளித்து தற்கொலை

கள்ளிப்பட்டி அருகே பெண் தீக்குளித்து தற்கொலை
X
கள்ளிப்பட்டி அருகே பெண் தீக்குளித்து தற்கொலை
கள்ளிப்பட்டி அருகே பெண் தீக்குளித்து தற்கொலை ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த டி என் பாளையம் கள்ளிப்பட்டி அருகே உள்ள பெருமுகை ஊராட்சி எரங்காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் நாராயண தாஸ். இவர்கோவையில் உள்ள ஒரு மில்லில் வேலை பார்த்து வருகிறார். அவருடைய மனைவி ஹேமப்பிரியா (வயது 42). தையல் தொழிலாளி இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தனியாக இருந்த ஹேமப்பிரியா தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளித்தார். இதில் உடல் கருகிய நிலையில் அலறித்துடித்தார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று அவரை மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ஹேமப்பிரியா நேற்று உயிரிழந்தார் ஹேமப்பிரியா எதற்காக தற்கொலை செய்து கொண்டார் ப என்பது குறித்து பங்களாப்புதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
Next Story