தியாகிகளின் நினைவிடத்தில் எம்எல்ஏ நினைவஞ்சலி.

மதுரை உசிலம்பட்டி அருகே தியாகிகளின் நினைவிடத்தில் எம்எல்ஏ அஞ்சலி செலுத்தினார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெருங்காமநல்லூர் வீரத்தியாகிகளின் நினைவை போற்றும் வகையில் தியாகிகளின் நினைவிடத்தில் நேற்று (ஏப்.3) மதுரை மாவட்ட ஓபிஎஸ் அணி செயலாளர் கோபாலகிருஷ்ணன், உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் முருகேசன், மற்றும் தேனி மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.பி. சையதுகான் இளைஞரணி மாநில செயலாளர் ராஜ்மோகன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். உடன் மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story