கோவை: வக்ஃப் சட்டத் திருத்த மசோதா-காங்கிரஸார் ஆர்ப்பாட்டம் !

X
மத்திய அரசின் வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவைக் கண்டித்தும், அதைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் கோவை மாவட்ட சிறுபான்மைத் துறையின் சார்பில் உக்கடம் வள்ளியம்மை பேக்கரி முன்பு காங்கிரஸ் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசின் சர்வாதிகார நடவடிக்கைகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் புகைப்படங்களை எரித்தும் எதிர்ப்பை தெரிவித்தனர். காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் மற்றும் நிர்வாகிகள், சிறுபான்மையினர் துறை நிர்வாகிகள் உட்பட பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
Next Story

