மின்சாரம் தாக்கியதில் வெல்டிங் தொழிலாளி பலி

மின்சாரம் தாக்கியதில் வெல்டிங் தொழிலாளி பலி
X
மதுரை திருமங்கலம் அருகே மின்சாரம் தாக்கியதில் வெல்டிங் தொழிலாளி உயிரிழந்தார்.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கூழையாபுரம் பகுதியைச் சேர்ந்த சேகர் (55) என்ற வெல்டிங் தொழிலாளி சேகர் நேற்று (ஏப்.3)காலையில் வீட்டின் மாடியில் உள்ள குளியலறையில் இருக்கும் மின் விளக்கு பொத்தானை அழுத்திய போது, அவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி பாண்டியம்மாள் திருமங்கலம் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story