சிதலமடைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தை புதிதாக கட்டிடம் கட்டித் தர வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

X
திருச்செங்கோடு அருகே எலச்சிபாளையம் மாணிக்கம்பாளையம் செல்லும் சாலை அரசு மருத்துவமனை அருகில் கடந்த 2002 ஆம் ஆண்டு சுமார் 800 சதுர அடியில் வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் கட்டப்பட்டு செயல்பட்டு வந்தன அலுவலகத்தில் சமுதாய வளகாப்பு நிகழ்ச்சி மற்றும் அங்கன்வாடி பணியாளருக்கான பயிற்சி 96 மையங்களுக்கு தேவையான பொருட்கள் கொண்டு செல்வதற்கான கட்டிடமாகவும் இயங்கி வருகிறது எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் 29 பஞ்சாயத்துகள் இருப்பதால் எலச்சிபாளையத்தை மையப்படுத்தி கட்டப்பட்டுள்ள கட்டிடம் சிதளம் அடைந்துள்ளது இதன் கீழ் எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியம் முழுவதும் 96 அங்கன்வாடி மையங்கள் இயங்கி வருகின்றன 96 மையங்களுக்கும் இவ்வுலகத்தின் மூலம் தான் குழந்தைகளுக்கான உணவுப் பொருட்கள் விநியோகம் செய்வது வழக்கம் அதற்கு ஏற்ற வகையில் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. 96 மையங்களில் சுமார் 192 மேல் பணிபுரிந்து வருகின்றனர். ஒன்றிய அலுவலகத்தில் ஏழு ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர் தற்போது இந்த கட்டடம் சிதலமடைந்து இதனை பயன்படுத்த முடியாமல் கடந்த ஐந்து வருடத்திற்கு முன்பு குமாரமங்கலம் மண்டக்காபாளையத்தில் இயங்கி வந்தன மிகவும் தூரமாக இருப்பதால் எலச்சிபாளையம் ராஜகணபதி தெரு பீடியோ அலுவலகம் அருகில் தனியார் கட்டிடத்தில் தற்போது இயங்கி வருகின்றனர். பழுதடைந்த கட்டடத்தை இடித்துவிட்டு புதிதாக கட்டிடம் கட்டித் தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Next Story

